Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவானது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது. இம்மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவானது. அதேபகுதியில் தொடர்ந்து நீடிக்கும் இது, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாகத் தீவிரமடையும்.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 26-ம் தேதி மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் முழுமையான புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. பின்னர் மேலும் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை, தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதாலும் மத்திய மற்றும் மேற்கு மத்திய வங்கக்க டல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர-ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் - Jio IPO உலக சாதனை
அடுத்த செய்தி
சென்னை புறப்பட இருந்த இண்டிகோ விமானத்துக்கு மிரட்டல்

தொடர்புடைய செய்திகள்